பெங்களூரு - காரைக்கால் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்


பெங்களூரு - காரைக்கால் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்
x

பெங்களூரு - காரைக்கால் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு நாஜிம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைக்கால்

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்.எல்.ஏ. தெற்கு ரெயில்வே அதிகாரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா காலத்தில் பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட ரெயில்கள் பல இன்னும் இயக்கப்படவில்லை. இதனை இயக்க வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி காரைக்கால் ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் காரைக்காலில் போராட்டம் நடத்தினர். நாடெங்கும் கொரோனா நிலைமை சீரடைந்துள்ள போதிலும், நிறுத்தப்பட்ட ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வே அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக, காரைக்கால்- பெங்களூருக்கு தினமும் இயக்கப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

தெற்கு ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயில் சேவையை மீண்டும் தொடங்கப்படும் பட்சத்தில் கர்நாடகத்தில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வருவோர் மற்றும் பல பகுதிகளுக்கு செல்வோர் பயனடைவர். எனவே இந்த ரெயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story