பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

புதுவை பாரதியர் கிராம வங்கி ஊழயர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுச்சேரி

புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடந்தது. சாரம் காமராஜர் சாலையில் உள்ள பாரதியார் கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுவை பாரதியார் கிராம வங்கியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் மற்றும் போனஸ் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களை ஒருநாள் விட்டு ஒருநாள் பணிக்கு வரச்சொல்லும் உத்தரவை திரும்ப வேண்டும். கிளைகளின் வணிகத்திற்கு ஏற்பட ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story