முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள்


முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள்
x

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

புதுச்சேரி

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

பிறந்தநாள் விழா

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், கார்த்திகேயன், துணைத்தலைவர் தேவதாஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அன்னதானம்

இதேபோல் ராஜ்பவன் தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டனர். முத்தியால்பேட்டை கணேஷ் நகர் சந்திப்பு, பச்சைமுத்து மாரியம்மன் கோவில் அண்ணா சாலை சந்திப்பு, முன்னாள் முதல்-அமைச்சர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒஸ்பிஸ் முதியோர் இல்லதிற்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் மகளிர் அணி தலைவி பஞ்சகாந்தி, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் லட்சுமிகாந்தன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் மேற்பார்வையில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெரார்டு, ராஜ்மோகன், முன்னாள் மத்திய மாவட்ட தலைவர் பிரதீஷ், வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டி, சிறுபான்மை பிரிவு செயலாளர் சார்லஸ், ராஜ்பவன் தொகுதி செயலாளர் அலேன், பொருளாளர் ஷிம்ஜித் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story