பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

விருப்ப ஓய்வு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2-வது விருப்ப ஓய்வு திட்டம், வேலை நேரம் அதிகரிப்பு போன்றவற்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து புதுவை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் சந்திரசேகரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாநில அமைப்பு செயலாளர் கலைச்செல்வி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story