பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி
தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் பி.எஸ்.என்.எல். மற்றும் பொதுத்துறை சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது. பி.எஸ்.என்.எல். 4 ஜி தொடக்கத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். டவர்கள் மற்றும் கண்ணாடி இழை கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்வீனர் சுப்பிரமணியன், செயலாளர் ராமகிருஷணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story






