அரிக்கன்மேட்டில் துப்புரவு பணி


அரிக்கன்மேட்டில் துப்புரவு பணி
x

மத்திய அரசின் சுற்றுலாத்துறை மூலம் அரிக்கன் மேட்டில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி

மத்திய அரசின் சுற்றுலா துறை அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிகுந்த அரிக்கன்மேடு பகுதியில் தூய்மை பணியை நடத்தியது. இதன் தொடக்க விழாவில் சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை அரிக்கன்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பகுதிகளில் தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து பசுமை சூழலுக்கான ஸ்வச்சதா பக்வாடா உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தூய்மை பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story