திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் பெட்டி


திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் பெட்டி
x

பாலியல் குற்றங்களை தடுக்க திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின்பேரில், முதல்கட்டமாக திருநள்ளாறு போலீஸ் நிலைய வளாகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் புகார்களை மனுவாக எழுதி போடலாம்.

இது குறித்து திருநள்ளாறு போலீஸ் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

பாலியல் உள்ளிட்ட சில முக்கிய குற்ற சம்பவ புகார்களை போலீசில் தெரிவிக்க விரும்புவோர் இனி போலீஸ் நிலையத்துக்குள் வந்து அதிகாரிகளை சந்திக்கத் தேவையில்லை. எந்த தயக்கமுமின்றி போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்துள்ள புகார் பெட்டியில், சம்பந்தப்பட்டவரோ, அவர் சார்பாகவோ புகாரை எழுதி போடலாம். இந்த புகார்கள் குறித்து ரகசியம் காக்கப்படும். புகார்கள் குறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொள்வார்கள்.

புகார் பெட்டியில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story