ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா
x

புதுவையில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,516 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 31 பேர் புதுச்சேரியையும், 4 பேர் காரைக்காலையும், 5 பேர் ஏனாமையும், 2 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 2 பேர், வீடுகளில் 166 பேர் என 168 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 16 பேர் குணமடைந்தனர். புதுவையில் தொற்று பாதிப்பு 2.77 சதவீதமாகவும், குணமடைவது 98.72 சதவீதமாகவும் உள்ளது.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 93 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 512 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 248 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 33 ஆயிரத்து 452 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story