சர்பத் கடைக்காரருக்கு கொலை மிரட்டல்


சர்பத் கடைக்காரருக்கு கொலை மிரட்டல்
x

புதுவை குயவர்பாளையம் சர்பத் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி

புதுவை குயவர்பாளையம் சுந்தரமேஸ்திரி வீதியை சேர்ந்தவர் அருள் (வயது50). இவர் நீடராஜப்பையர் வீதியில் சர்பத் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த உமா சங்கர் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அருள் 3-ந் தேதி காலை 11 மணிக்கு மோட்டார் சைக்கிளில் நீடராஜபையர் வீதியில் உள்ள கடைக்கு சென்றபோது, அவரை உமா சங்கரும் கூட்டாளிகள் சிலரும் வழிமறித்தனர். அப்போது அவர்கள் அருளை தாக்கி, மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் உமா சங்கர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.


Next Story