ரூ‌.20 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியது


ரூ‌.20 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் தொடங்கியது
x

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் நலத்திட்ட பணிக்கான பூமி பூஜையை செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அருகில் ஆணையர் கார்த்திகேயன் உள்ளார்.

பாகூா் தொகுதியில் ரூ‌.20 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

பாகூர்

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் வேலன் நகர், அருணாச்சலேஸ்வரர் நகர், ராகவேந்திரா நகரில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 372 செலவில் குடிநீர் குழாய் அமைக்கவும், ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 405 செலவில் காட்டுக்குப்பம் தந்தை பெரியார் தெரு முதல் அண்ணா தெரு வரை 'ட' வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும், மூர்த்திக்குப்பம் ஸ்ரீராம் நகரில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 348 செலவில் குடிநீர் குழாய் அமைக்கவும், குருவிநத்தம் ஆர்.ஆர்.நகர் தெற்கு பகுதியில் ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 462 செலவில் தார் சாலை அமைக்கவும், குருவிநத்தம் முல்லை நகர் விரிவாக்கத்திற்கு ரூ‌.3 லட்சத்து 43 ஆயிரத்து 364 செலவில் தார் சாலை, குருவிநத்தம் தெற்கு வீதியில் கீரைகர சந்து மற்றும் சிவசக்தி நகரில் ரூ‌.3 லட்சத்து 48 ஆயிரத்து 587 செலவில் குடிநீர் குழாய் அமைக்கவும், ரூ.3 லட்சத்து 97ஆயிரத்து 734 செலவில் மேல்பாரிகல்பட்டு 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.‌ 20லட்சம் ஆகும்.

இதற்கான பூமி பூஜை அந்தந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் பிரதீப், புனிதவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story