பாழடைந்து கிடக்கும் பாடசாலை கட்டிடம்


பாழடைந்து கிடக்கும் பாடசாலை கட்டிடம்
x

வைத்திக்குப்பத்தில் பாழடைந்து கிடக்கும் பாடசாலை கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரி

வைத்திக்குப்பத்தில் பாழடைந்து கிடக்கும் பாடசாலை கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாடசாலை

புதுவை வைத்திக்குப்பத்தில் குபேர் பாடசாலை இயங்கி வந்தது. சுதந்திரம் அடைந்த காலம் முதலே இந்த பாடசாலை செயல்பட்டு வந்தது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வந்தனர். இந்த கட்டிடம் சேதமடைந்ததை தொடர்ந்து மாணவ, மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

அதன்பின் பல ஆண்டுகளாக அந்த பாடசாலை சீரமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக கட்டிடத்தில் ஏராளமான மரம், செடிகள் வளர்ந்து பாழடைந்து காட்சி அளிக்கிறது. நகரின் முக்கிய பகுதியில் இந்தநிலை காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி அரசு செலவிட்டு வருகின்றது. அதில் இந்த பாடசாலை கட்டிடத்தையும் சீர்செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த பாடசாலை கட்டிடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடுத்து நூலகம் உள்ளிட்டவை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பணிகளை விரைவாக எடுத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதேபோல் புதுவையில் பல்வேறு கட்டிடங்களில் மரம், செடிகொடிகள் வளர்ந்துள்ளன. அவற்றையும் சரிசெய்ய கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story