வருவாய்த்துறையின் சான்றிதழை கேட்கக்கூடாது


வருவாய்த்துறையின் சான்றிதழை கேட்கக்கூடாது
x

பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு வருவாய்த்துறையின் சான்றிதழை கேட்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி

பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு வருவாய்த்துறையின் சான்றிதழை கேட்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடியிருப்பு சான்றிதழ்

தற்போது பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்த சேர்க்கைக்காக வருவாய்த் துறையில் இருந்து குடியிருப்பு சான்றிதழ் மற்றும் நேட்டிவிட்டி (குடியுரிமை) சான்றிதழ் பெறுவதில் மாணவர்களுக்கு சிரமம் உள்ளதாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்காக மாணவ, மாணவிகளிடம் வருவாய்த்துறையிலிருந்து சான்றிதழ் வேண்டும் என்று கல்வித்துறை கட்டாயப்படுத்தக்கூடாது.

மாற்று சான்றிதழ்

மேலும் பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கை கோரும் மாணவ, மாணவிகள் புதுச்சேரி மாநிலத்தில் படித்து தேர்ச்சி பெற்றதற்கான மாற்று சான்றிதழை வைத்தே மாணவர் சேர்க்கையை கல்வித்துறை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story