சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய கண்காட்சி


சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய கண்காட்சி
x

புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றி கண்காட்சியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய கண்காட்சி பா.ஜ.க. சார்பில் கருவடிக்குப்பத்தில் காமராஜர் மணி மண்டபம் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாட்டில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சி வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


Next Story