ஏழை மாணவரின் மருத்துவ படிப்புக்கு நிதி உதவி


ஏழை மாணவரின் மருத்துவ படிப்புக்கு நிதி உதவி
x

அரசுப் பள்ளியில் படித்த ஏழை மாணவரின் மருத்துவப் படிப்புக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் தரணீஸ்வரன். இந்த மாணவனுக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், பண பிரச்சினையால் தவித்து வந்தார். இந்த நிலையில் மாணவனுக்கு, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ரூ.50 ஆயிரம் வழங்கினர்.

மேலும் அந்த மாணவனின் படிப்பிற்கு உதவும் பொருட்டு ஓய்வுபெற்ற வேளாண் துறை இணை இயக்குனர் பாஸ்கரன் ரூ.20 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சாய்வர்கீஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story