முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது.
புதுச்சேரி
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது.
கந்தசஷ்டி
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும் விழா ஆகும். இதன்படி கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது.
புதுவை ரெயில்நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி மற்றும் பிரம்மோற்சவ விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சூரசம்ஹாரம்
இதையொட்டி விழா நாளில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி வருகிற 30-ந்தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. அதனை தொடர்ந்து சாமி வீதியுலா நடைபெறுகிறது.
இதேபோல் கதிர்காமம் முருகன், காலாப்பட்டு பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நடக்கிறது.
அமாவாசை நோன்பு
இதனிடையே அமாவாசை தினமான இன்று நோன்பு எடுக்கும் நிகழ்ச்சிக்காக கோவில்களில் கூட்டம் அலைமோதியது. ஆண்கள், பெண்கள் என நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.






