புனித சந்தன மாதா ஆலய ஆண்டு திருவிழா


புனித சந்தன மாதா ஆலய ஆண்டு திருவிழா
x
தினத்தந்தி 24 July 2023 6:00 PM GMT (Updated: 24 July 2023 6:01 PM GMT)

கோட்டுச்சேரியில் புனித சந்தன மாதா ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த பிள்ளை தெரு வாசலில் பழமை வாய்ந்த புனித சந்தன மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

முன்னதாக, பங்கு மக்கள் கொடியை தங்கள் கிராமங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது கொடிக்கு புனித நீர், வாசனை திரவியங்கள் தெளித்தும், பூக்களை தூவியும் வழிப்பட்டனர். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட உதவி பங்கு தந்தை ஆரோக்கிய சகாயராஜ் அடிகளார் தலைமையில் ஆலயம் முன்பு கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் நாளை இரவு சிறப்பு திருப்பலி மற்றும் மின்விளக்கு அலங்கார தேர்பவனி நடக்கிறது.


Next Story