அரசு பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு


அரசு பள்ளியில்  கம்ப்யூட்டர்கள் திருட்டு
x

திருவண்டார்கோவிலில் அரசு பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர்களை திருடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை

திருவண்டார்கோவிலில் அரசு பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர்களை திருடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

அரசு பள்ளியில் திருட்டு

திருபுவனை அருகே உள்ள திருவண்டார்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சம்பவத்தன்று இந்தபள்ளி அலுவலக அறையில் இருந்த 2 கம்ப்யூட்டர்கள், சி.பி.யு மற்றும் மின்சாதன பொருட்கள் திருடுபோனது.

இதுகுறித்து பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி திருபுவனை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபரை தேடி வந்தனர்.

நேற்று இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் குற்றவியல் போலீஸ்காரர்கள் அசோகன், சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் திருவண்டார்கோவிலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக சாக்குமூட்டையுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனா்.

கல்லூரி மாணவர்

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் கம்ப்யூட்டர்கள், சி.பி.யு., மற்றும் உதிரி பாகங்களை வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் அவர், திருவண்டார்கோவிலை சேர்ந்த செல்வா (வயது 19) என்பதும், அரசு பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர்கள், சி.பி.யு. மற்றும் மின்சாதன பொருட்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்சாதனங்களை பறிமுதல் செய்தனர். கைதான செல்வா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story