கஞ்சா போதையில் மிரட்டும் வாலிபர்கள்


கஞ்சா போதையில் மிரட்டும் வாலிபர்கள்
x

மூலக்குளம் மேரி உழவர்கரை பகுதியில் கஞ்சா போதையில் மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்குளம்

மூலக்குளம் மேரி உழவர்கரை பகுதியில் 2 வாலிபர்கள் இரும்பு தடியுடன் அவ்வழியே செல்பவர்களை அடித்து மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக யாரும் புகார் செய்யவில்லை. இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வாலிபர்கள் யார்? என மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேட்டுப்பாளையம் போக்குவரத்து மையத்தில் வெளி மாநிலத்தவரை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. கஞ்சா விற்கும் வாலிபர்களே கஞ்சா போதையில் அங்கு இருந்தவர்களை தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடியோவில் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story