கதிர்காமம் அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் போராட்டம்


கதிர்காமம் அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
x

பாதுகாப்பு வழங்கக்கோரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

பாதுகாப்பு வழங்கக்கோரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதல்

புதுவையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுடன் வருபவர்களுக்கும், பணியில் உள்ள டாக்டர்கள், பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது. இந்த மோதலின்போது டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதலும் நடத்தப்படுகிறது.

இதேபோல் கடந்த 24-ந் தேதி இரவு பணியில் இருந்த பயிற்சி டாக்டரான முகமது ரில்வான் என்பவரை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்களான கலையரசன், கிரிதரன் ஆகியோர் தாக்கினர். அவர்களை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.

பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

இந்தநிலையில் இன்று காலை பயிற்சி டாக்டர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேர பணியின்போது உரிய போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும், டாக்டர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பயிற்சி டாக்டர்களின் போராட்டம் காரணமாக கதிர்காமம் அரசு மருத்துவ மனையில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் விரைந்து சென்று பயிற்சி டாக்டர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

நோயாளிகள் பாதிப்பு

அப்போது கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிகளை தொடர்ந்தனர்.

பயிற்சி டாக்டர்களின் போராட்டம் காரணமாக அனைத்து பிரிவுகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரிதும் பாதிக்கப்பட்டது.


Next Story