காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

காரைக்காலில் நிலுவை சம்பளத்தை கேட்டு உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால்

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், துணை தலைவர்கள் சுப்புராஜ், வசந்தி, இணை ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாசு, ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்க தலைவர் ஜான் பிரிட்டோ ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி ஊழியர்களுக்கு பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வு வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துவரியை உயர்த்த வேண்டும். உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் ஓய்வூதியதாரர்கள் நலச்சங்க செயலாளர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.


Next Story