சொகுசு கார் பரிசு விழுந்ததாக பணம் மோசடி


சொகுசு கார் பரிசு விழுந்ததாக பணம் மோசடி
x

ஆன்லைன் விளையாட்டு மூலம் சொகுசு கார் பரிசு விழுந்ததாக பணம் மோசடி நடந்துள்ளது.

அரியாங்குப்பம்

ஆன்லைன் விளையாட்டு மூலம் சொகுசு கார் பரிசு விழுந்ததாக பணம் மோசடி நடந்துள்ளது.

சொகுசுகார் பரிசு

தவளக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவர், தனது செல்போன் மூலம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அந்த விளையாட்டில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு சுரேஷ் ஆன்லைன் மூலம் பதில் அளித்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அவரது முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ஒரு விண்ணப்பம் அனுப்பி இருந்தனர். ஆன்லைன் விளையாட்டு மூலமாக ரூ.12.50 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் பரிசு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறும் கூறியிருந்தனர்.

ரூ.55 ஆயிரம் மோசடி

இந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த சுரேஷ் ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து அவரது செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது. அதில் வந்திருந்த தகவலின் அடிப்படையில் 3 முறையாக ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் பணம் அனுப்பியதாக தெரிய வருகிறது.

மேலும் அதே நாளில் சுமார் ரூ.50,000 உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தனர். அதனை பார்த்த சுரேஷ், தகவல் வந்த அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு பதில் அளித்த அந்த நபர் இன்னும் சில நாட்களில் சொகுசு கார் உங்களுக்கு கிடைத்துவிடும் என கூறி செல்போனை துண்டித்து விட்டார். அதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் செய்வதறியாமல் திகைத்தார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி வேதனை அடைந்தார்.

இதுகுறித்து அவர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story