5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம்


5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம்
x

தானாம்பாளையம் கிராமத்தில் 5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

அரியாங்குப்பம்

தானாம்பாளையம் கிராமத்தில் 5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

கிராம கோவில்

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள 5 கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 15-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

காலை 6 மணி அளவில் பூரணி பொற்கலை சமேத அய்யனார் கோவில், அதைத்தொடர்ந்து புத்துமாரியம்மன், சிவசடையப்பர், சாந்த காளியம்மன், புட்லாய் அம்மன்ஆகிய 5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் சபாநாயகர் செல்வம், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழாக்கோலம்

ஒரே கிராமத்தில் 5 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் கிராமமே விழாக்கோலம் பூண்டது. உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அம்மனை தரிசித்தனர்.

இன்று இரவு 5 சாமிகளும் விசேஷ அலங்காரத்தில் வீதி உலா வந்தது. இதற்கான ஏற்பாடுகளை தானம்பாளையம் கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story