கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது


கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
x

வில்லியனூர் சுல்தான்பேட்டை பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் சுல்தான்பேட்டை முத்துப்பிள்ளைப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக வில்லியனூர் போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு கஞ்சா விற்பனை செய்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சேர்ந்த சரண்ராஜ் (வயது25) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story