காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை


காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை
x

காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சினர் வலியுறுத்தினர்.

புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் பரவி வரும் காய்ச்சல் எந்த தன்மையுடையவது என்று இதுவரை கூறமுடியாத நிலையில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்துகின்றனர். இந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசும், சுகாதாரத்துறையும் செயல்படுத்தாததால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்களுக்கும் ஊசி போட்டுக்கொண்டதாக அவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் வருகிறது. இது சுகாதாரத்துறையின் மெத்தனப்போக்கையும், நிர்வாக குளறுபடிகளையும் காட்டுகிறது.

காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மருத்துவ நிபுணர்களின் கூட்டத்தினை கூட்டி போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story