16 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம்


16 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம்
x

புதுச்சேரி, ஜூன்.26- புதுச்சேரி மாநிலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் 6 ஆயிரத்து 178 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரும், ஐகோர்ட்டு நீதிபதியுமான ராஜா வழிகாட்டுதலின்பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக்கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதனை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா தொடங்கி வைக்க உள்ளார். 6,178 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என சுமார் 6 ஆயிரத்து 178 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. அதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், காரைக்காலில் 3 அமர்வுகளும், மாகியில் 2 அமர்வும், ஏனாமில் ஒரு அமர்வு என 16 அமர்வுகள் செயல்பட உள்ளது. நிகழ்ச்சியில் புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், முதன்மை சார்பு நீதிபதி ராபட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், துணைத்தலைவர் தனலட்சுமி, செயலாளர் கதிர்வேலு, அரசு வக்கீல்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் உறுப்பினர் செயலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் 6 ஆயிரத்து 178 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

தேசிய மக்கள் நீதிமன்றம்

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரும், ஐகோர்ட்டு நீதிபதியுமான ராஜா வழிகாட்டுதலின்பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன், மனைவி பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக்கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதனை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா தொடங்கி வைக்க உள்ளார்.

6,178 வழக்குகள்

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என சுமார் 6 ஆயிரத்து 178 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. அதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், காரைக்காலில் 3 அமர்வுகளும், மாகியில் 2 அமர்வும், ஏனாமில் ஒரு அமர்வு என 16 அமர்வுகள் செயல்பட உள்ளது.

நிகழ்ச்சியில் புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், முதன்மை சார்பு நீதிபதி ராபட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், துணைத்தலைவர் தனலட்சுமி, செயலாளர் கதிர்வேலு, அரசு வக்கீல்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் உறுப்பினர் செயலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story