ஒலிம்பிக் சங்க அலுவலகம் திறப்பு


ஒலிம்பிக் சங்க அலுவலகம் திறப்பு
x

லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது.

புதுச்சேரி

லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் புதுச்சேரி ஒலிம்பிக் சங்க அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, ஒலிம்பிக் சங்க மாநில தலைவரும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரை அலுவலக இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான முத்துலட்சுமி அம்மாள் விளையாட்டு கழக பெயர் பலகையை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார். இந்த விழாவில் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் விளையாட்டு போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது.


Next Story