மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி


மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி
x

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

புதுச்சேரி

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் 30 தொகுதிகளிலும் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. காமராஜ் நகர் தொகுதி வெங்கட்டா நகர் பூங்காவில் நடந்த ஓவியப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஓவியப்போட்டியை பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் ரவிச்சந்திரன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் உமாசங்கர், வர்த்தக பிரிவு மாநில இணை அமைப்பாளர் சீனிவாச பெருமாள், காமராஜ் நகர் தொகுதி தலைவி தனலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஓவியப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story