அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தவர்களுக்கு அபராதம்


அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தவர்களுக்கு அபராதம்
x

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தவர்களுக்கு அபராதம் விதித்து புதுவை கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுச்சேரி

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தவர்களுக்கு அபராதம் விதித்து புதுவை கோர்ட்டு உத்தரவிட்டது.

விளம்பரங்கள்

புதுவையில் திறந்தவெளியில் அனுமதியின்றி விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் விளம்பர பதாகைகள், பிளக்ஸ் வைப்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு விளம்பர பதாகை வைத்ததாக நகைக்கடை மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் திருமணத்துக்கு சுவரொட்டிகள் ஓட்டியவர் மற்றும் அரசியல் கட்சி ஒன்றின் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

அபராதம்

இந்த வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்குகளில் தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் நேற்று தீர்ப்பு அளித்தார்.

அப்போது, அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தவர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரவீன்குமார் ஆஜர் ஆனார்.


Next Story