மக்கள் நீதிமன்றம்


மக்கள் நீதிமன்றம்
x

மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் சார்பில் மக்கள் நீதிமன்றம் வருகிற சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது.

புதுச்சேரி

புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் முத்துவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் தலைமையில் மற்றும் உறுப்பினர்களை கொண்டு ஒரு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை குடிமைப்பொருள் வழங்கல்துறை செயலாளர் உதயகுமார் தொடங்கிவைக்க உள்ளார். இதில் வழக்கு தொடுத்தவர்கள் தங்களது வழக்குகளை சமாதானமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story