அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு
x

அரசு ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குப்பதியக்கோரி புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தி அறிக்கை வெளியீடப்பட்டது,

புதுச்சேரி

புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் மாணவிகள் செல்போன் வைத்துள்ளார்களா? என்று ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில் ஆசிரியைகள் சோதனை செய்துள்ளனர். இது போக்சோ சட்டப்படி குற்றமாகும். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாங்கள் விரிவான புகார் அனுப்பிய பிறகே சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். குழந்தைகள் நலக்குழுவும் அரசியல் அழுத்தத்துக்கு பணிந்து முறையாக விசாரிக்காமல் குற்றவாளிகளை காப்பாற்றி வருவதாக தெரிகிறது.

எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இல்லையெனில் அனைத்து சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story