காரைக்காலில் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு போலீசார் விளக்கும் நிகழ்ச்சி


காரைக்காலில் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு போலீசார் விளக்கும் நிகழ்ச்சி
x

காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நிரவி காவல் நிலைய போலீசார் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

புதுச்சேரி,

காரைக்காலில் உள்ள நிரவி காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. புதுச்சேரியில் முதலிடத்தைப் பிடித்த காவல் நிலையமான நிரவி காவல் நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல் நிலையத்திற்கு வருகை தந்த மாணவர்களுக்கு அங்கிருந்த போலீசார் ஆய்வாளர் அறை, சார்பு ஆய்வாளர் அறை, பதிவேடு வைப்பறை உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தனர். மேலும் ரோந்து விளக்கப்படம், குற்ற விளக்கப்படம் வாயிலாக குற்றங்கள், கொள்ளைகள் அதிகம் நடக்கும் இடங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், காவல் நிலையம் குறித்த தங்களுக்கு பொதுவாக இருந்த பயம் நீங்கியதாக தெரிவித்தனர். போலீசார் தங்களது கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்து காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்ததாக, இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர்.


Next Story