திருக்கனூரில் போலீசார் கொடி அணிவகுப்பு


திருக்கனூரில் போலீசார் கொடி அணிவகுப்பு
x

கஞ்சா விற்பனை, குற்றங்களை தடுக்க திருக்கனூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

திருக்கனூர்

திருக்கனூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றனர். இதையடுத்து கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து திருக்கனூர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் இன்று இரவு திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர்கள் புனிதராஜ், சரண்யா ஆகியோர் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் திருக்கனூர், காட்டேரிக் குப்பம் போலீசார் மற்றும் ஐ.ஆர்.பி.என். போலீசார் கலந்துகொண்டனர்.

திருக்கனூர் கடைவீதியில் இருந்து புறப்பட்ட கொடி அணிவகுப்பு திருக்கனூர் வணிகர் வீதி, கே.ஆர்.பாளையம் கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது. அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வந்து திருக்கனூர் பகுதியில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story