புதுச்சேரி அணி அபார வெற்றி


புதுச்சேரி அணி அபார வெற்றி
x

சி.கே நாயுடு கோப்பைக்கான கிாிக்கெட் போட்டியில் புதுச்சோி அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 4 நாள் சி.கே. நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி, மணிப்பூர் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்குள் சுருண்டது. புதுச்சேரி அணி சார்பில் சித்தக் சிங் 4 விக்கெட்களும், ஜஸ்வந்த் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய புதுச்சேரி அணி 380 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக, பந்துவீச்சில் கலக்கிய சித்தக் சிங் 118 ரன், கவுதம் ஸ்ரீநிவாஸ் 108 ரன், ஆகாஷ் புகழேந்தி 45 ரன் எடுத்தனர். 233 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மணிப்பூர் அணி 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. சித்தக் சிங் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி, அசத்தினார்.

இதன் மூலம் புதுச்சேரி அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு இன்னிங்சிலும் 12 விக்கெட் மற்றும் 118 ரன்கள் எடுத்த புதுச்சேரி அணியின் கேப்டன் சித்தக் சிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 More update

Next Story