புதுச்சேரி அணி அபார வெற்றி


புதுச்சேரி அணி அபார வெற்றி
x

பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அபிராமி 8 விக்கெட் விழ்த்தியதால் புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது.

புதுச்சேரி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. டேராடூனில் இன்று நடந்த போட்டியில் புதுச்சேரி, அருணாச்சல பிரதேச அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணி புதுச்சேரி வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 23.5 ஓவர்களில் 72 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. புதுச்சேரி வீராங்கனை அபிராமி 9.5 ஓவர்கள் பந்து வீசி 29 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்மே இழந்து 76 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வீராங்கனை கவிஷா 39 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

1 More update

Next Story