மணவெளி தொகுதியில் சாலை அமைக்கும் பணி


மணவெளி தொகுதியில் சாலை அமைக்கும் பணி
x

பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தார் சாலை பணியை சபாநாயகர் செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரை நிலை கழகம் மூலம் ரூ.36 லட்சம் மதிப்பில் மணவெளி தொகுதி என்.ஆர். நகரில் கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கொருக்கமேடு முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை 2 கி.மீ.க்கு ரூ.61 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதியின் முக்கிய பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சக்திவேல், ராகவன், கோவிந்தராஜ், செந்தில், சகாயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story