கடற்கரையில் ரகளை; 4 வாலிபர்கள் கைது


கடற்கரையில் ரகளை; 4 வாலிபர்கள் கைது
x

புதுச்சேரி கடற்கரை சாலை அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே மதுபோதையில் வாலிபர்கள் ரகளையில் ஈடுபடுவதாக ஒதியஞ்சாலை போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரின் பேச்சை கேட்க மறுத்தனர். அதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அருண் (வயது27), கோபி (26), விக்னேஷ் (25), பிரபாகரன் (22) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story