மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழி


மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழி
x

மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, பொற்கிழி வழங்கப்பட்டது.

புதுச்சேரி

மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துதல் மற்றும் மொழிப்போரில் பங்கேற்ற தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை தாங்கினார். உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கட்சியின் மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மொழிப்போரில் பங்கேற்ற தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் குணாதிலீபன், செந்தில்குமார், பொருளாளர் லோகையன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story