425 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


425 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

பார்சல் நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட 425 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி

பார்சல் நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட 425 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் தடை

புதுவையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வப்போது சோதனைகள் மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதோடு, வியாபாரிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

பறிமுதல்

உழவர்கரை நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்த நகராட்சியின் துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஆணையர் சுரேஷ்ராஜ் உத்தரவின்பேரில் வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகளிலும் தினசரி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பார்சல் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 425 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த நிறுவனங்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தனர்.


Next Story