எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணை தலைவர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு


எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணை தலைவர் உள்பட   3 பேர் சிறையில் அடைப்பு
x

காரைக்காலில் ரகசிய கூட்டங்கள் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைத்தலைவர் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காரைக்கால்

காரைக்காலில் ரகசிய கூட்டங்கள் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைத்தலைவர் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

என்.ஐ.ஏ. சோதனை

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடியாக சோதனை செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் தோமாஸ் அருள் வீதியில் உள்ள புதுச்சேரி மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் முகமது பிலால் (வயது 38), காமராஜர் சாலையை சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் (35), திரு-பட்டினம் பகுதியை சேர்ந்த பத்ரூதீன் (49) ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தினர். அவர்களது வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ரகசிய கூட்டங்கள்

மேலும் 3 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் முகமது பிலால் தலைமையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல், போலீசாருக்கும் தெரிவிக்காமல், ரகசியக்கூட்டங்கள் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதனால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரும் காரைக்கால் நகர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அல்லி 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story