தாகூர் கல்லூரி முதல்வர் 100-வது நாளாக போராட்டம்


தாகூர் கல்லூரி முதல்வர் 100-வது நாளாக போராட்டம்
x

புதுச்சேரி

தாகூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறைகள் கட்டித்தரவேண்டும், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும், போதுமான பஸ்வசதி ஏற்படுத்த வேண்டும், உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியாகிரக முறையில் தாகூர் கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் கடந்த 99 நாட்களாக தரையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். 100-வது நாளான நேற்று அவர் அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இந்தநிலை தொடருமானால் வருகிற அக்டோபர் மாதம் முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் முதல்வர் சசிகாந்ததாஸ் திட்டமிட்டுள்ளார். அதற்கும் எந்தவித பலனும் இல்லாமல் கடமைகளை சரிவர செய்ய முடியாமல் போகும்பட்சத்தில் தார்மீக அடிப்படையில் தன்னுடைய முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story