5 ஆயிரம் லிட்டர் டீசல் கடத்த முயன்ற டேங்கர் லாரி பறிமுதல்


5 ஆயிரம் லிட்டர் டீசல் கடத்த முயன்ற டேங்கர் லாரி பறிமுதல்
x

புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு 5 ஆயிரம் லீட்டர் டீசல் கடத்த முயன்ற டேங்கர் லாரியே போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கிருந்து ஒரு டேங்கர் லாரியில் டீசல் நிரப்பி, தமிழக பகுதிக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பொட்ரோல் பங்க்குக்கு சென்று அங்கிருந்த டேங்கர் லாரியை சோதனை செய்தனர். அதில் 5 ஆயிரம் லிட்டர் டீசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக டேங்கர் லாரி டிரைவர் விமல் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், தமிழகத்தை விட புதுவையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதால், இங்கிருந்து மொத்தமாக டீசலை வாங்கி தமிழக பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிக்கு எடுத்துச்செல்ல இருப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து டீசல் கடத்த முயன்ற டேங்கர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story