திட்டங்களின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்


திட்டங்களின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்
x

திட்டங்களின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் ஷீலா உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் அனைத்து துறை தலைவர்களுக்கும், திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் ஷீலா அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் மத்திய அரசு நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களை நிதி ஆயோக் கண்காணித்து வருகிறது. இதுதவிர மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் இணை செயலாளர் தலைமையின் கீழ் மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டங்களும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதிஉதவியோடு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் முடிப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்குமாறு அனைத்து துறை தலைவர்களுக்கும் தலைமை செயலாளர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே துறை தலைவர்கள் தங்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டிலும் திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி கடந்த செப்டம்பர் 30-ந் தேதி முடிவடைந்த 2-வது காலாண்டிற்கான அறிக்கையை நாளைக்குள் (திங்கட்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story