குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்


குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
x

பரிக்கல்பட்டில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

பாகூர்

பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் உள்ள குளம் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. ஆனால் அந்த குளத்தை சரிவர பராமரிக்காததால் தற்போது செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முழுவதும் குளத்தில் கலக்கிறது.

மேலும் குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர்ப்பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே வருகிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக அப்பகுதி மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டு வருகிறது. குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது இந்த குளம் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிவிட்டது. விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story