கவர்னர் அனுமதிபெற்று தரவேண்டும்


கவர்னர் அனுமதிபெற்று தரவேண்டும்
x

புதுவை பட்ஜெட்டிற்கு கவர்னர் அனுமதிபெற்று தரவேண்டுமென அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கவர்னர் தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் மாநிலத்தின் பட்ஜெட் ரூ.11 ஆயிரம் கோடி என இறுதி செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் நிதியுதவி ரூ.2 ஆயிரத்து 900 கோடி என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் ரூ.1,729 கோடி புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ.1,200 கோடியை மத்திய அரசின் நிதியுதவியாக எதிர்பார்த்து இவ்வாண்டு பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகையை மத்திய அரசு இதுவரை ஏற்காததால் இவ்வாண்டு ரூ.11 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்று தெரிகிறது. கவர்னர் டெல்லி சென்று புதுவை பட்ஜெட்டிற்கு உரிய அனுமதியை பெற்றுத்தர வேண்டும்.

புதுவை மாநிலத்தில் ரேசன் அரிசி கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு எஞ்சிய தரமற்ற அரிசியை அரசிடமிருந்து டெண்டர் மூலம் ஏலம் எடுத்தவர் கொண்டு சென்றதாக தெரிகிறது. அரசின் மீது தவறில்லாதபட்சத்தில் இதில் உள்ள உண்மை நிலையை சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது அதிகாரிகள் மக்கள் முன்பு கூற வேண்டிய கடமை உள்ளது. புதுவையில் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகளில் தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதைபின்பற்றி புதுவை தலைமை கழகத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு தேசியக்கொடி வழங்க உள்ளோம். இவ்வாறு அன்பழகன் கூறினார்.


Next Story