புதுவை கவர்னரை திரும்ப பெற வேண்டும்


புதுவை கவர்னரை திரும்ப பெற வேண்டும்
x

புதுச்சேரி கவர்னரை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு கூட்டம் இன்று முதலியார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன். துணைச்செயலாளர்கள் அபிஷேகம், கீதநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் தினேஷ் பொன்னையா, சேது செல்வம், சிவா, சரளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் பொறுப்பு கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சருக்கு மேலாக செயல்பட்டு வருகிறார். அவர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். எனவே மத்திய அரசு உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும். புதுவைக்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதி படி என்.ஆர்.காங்கிரஸ். பா.ஜ.க. கூட்டணி அரசு புதுச்சேரி லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து நடத்த வேண்டும். புதுவையில் கலாசார சீரழிவை தடுத்து நிறுத்தும் வகையில் பப்-பார்கள் மற்றும் ஸ்பா போன்ற மையங்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். புதுச்சேரியில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் விற்பனையை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து ரேஷன்கடைகளையும் உடனடியாக திறந்து, 14 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். புதுவையில் உள்ள சுதேசி, பாரதி மற்றும் ரோடியர் பஞ்சாலைகளை மீண்டும் திறந்து நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story