ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்கும் பணி

ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்கும் பணி
x

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தில் சங்கராபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்கும் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

வில்லியனூர்

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்தில் சங்கராபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்கும் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

ஆற்றில் கழிவுநீர் கலப்பு

வில்லியனூர் பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் சங்கராபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்று தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் ஜப்பான் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் ஆற்றில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை நிகழ்ச்சி கோட்டைமேடு சங்கராபரணி ஆற்றங்கரையோரம் நடைபெற்றது.

அமைச்சர் ஆய்வு

இப்பணியை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆதித்யா கல்வி குழும தலைவர் ஆனந்தனிடம், கழிவுநீர் சுத்தம் செய்யும் மையம் அமைப்பது குறித்து ஆலோசித்தார். இந்த திட்டத்தை சமூக பொறுப்புணர்வு நிதியில் (சி.எஸ்.ஆர். நிதி) வில்லியனூர் பகுதியில் சுமார் 6 இடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

Next Story