டாக்டர் வீட்டில் நகைகள் திருட்டு


டாக்டர் வீட்டில் நகைகள் திருட்டு
x

வில்லியனூரில் திருமணம் நடக்க இருந்த நிலையில் டாக்டர் வீட்டில் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வில்லியனூர்

வில்லியனூர் திருமணம் நடக்க இருந்த நிலையில் டாக்டர் வீட்டில் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டாக்டர்

வில்லியனூர் சேத்திலால் நகர் பட்டாணிகளம் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து என்ற வீரபுத்திரன் (வயது 59). அவரது மகன் இளங்கோவன் (25). டாக்டரான இவர், நாகையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், ஈரோடு மாவட்டம் கொடிமுடி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக திருமண பத்திரிகை வைப்பதற்காக வீரமுத்து வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் கடந்த 27-ந்தேதி சென்னை சென்று விட்டார்.

நகைகள் திருட்டு

உறவினர்கள், நண்பர் களுக்கு பத்திரிகை கொடுத்து விட்டு நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 3 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்னபக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் வீரமுத்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story