மருத்துவமனை ஊழியரின் செல்போன் திருட்டு


மருத்துவமனை ஊழியரின் செல்போன் திருட்டு
x

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியரின் செல்போன் திருடு போனதையடுத்து போலீசார் திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த புதுத்துறை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுரளி. காரைக்கால் அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை ராஜீவ்காந்தி மைதானம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது தனது விலை உயர்ந்த செல்போனை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டி வைத்திருந்தார். நடைபயிற்சி முடிந்து சுமார் ஒருமணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த செல்போனை காணவில்லை. யாரோ மர்மநபர் பாலமுரளியை நோட்டமிட்டு செல்போனை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து பாலமுரளி, காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடனை வலைவீசிதேடி வருகின்றனர்.


Next Story