ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ரெயில்


ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ரெயில்
x

புதுச்சேரி-விழுப்புரம் இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி ரெயில் பயணிகள் சங்க தலைவர் சாமி என்ற கருப்பசாமி, செயலாளர் மனோகர், பொருளாளர் திருப்பதி மற்றும் நிர்வாகிகள் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் மல்லையாவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி-விழுப்புரம் இடையே 1 மணி நேரத்திற்கு ஒரு முறை பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும். புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி, மங்களூரு, யஷ்வந்த்பூர் ஆகிய இடங்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்க வேண்டும். புதுச்சேரி- கடலூர் இடையே 21 கி.மீ. தூரம் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை-விழுப்புரம் பயணிகள் ரெயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story