போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவிகள் மூலம் பயிற்சி


போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவிகள் மூலம் பயிற்சி
x

விதிமுறை மீறுபவர்களை கண்டறிய போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுச்சேரி

விதிமுறை மீறுபவர்களை கண்டறிய போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

போலீசாருக்கு பயிற்சி

புதுவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அப்போது விதிகளை மீறியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

இந்தநிலையில் விதிமுறை மீறல் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் ஏற்படும் தகராறுகளை பதிவு செய்ய போலீசாரின் சட்டையில் பொருத்தக்கூடிய அளவிலான சிறியரக கேமராக்களும் வந்துள்ளன. அந்த கேமராக்களை பயன்படுத்துவது, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மின்னணு முறையில் அபராதம் விதிப்பது, தூரத்தில் வருபர்கள் அதிவேகமாக வருவதை நவீன கருவி மூலம் (ஸ்பீடு கன்) பதிவு செய்வது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு நேற்று காலை கடற்கரை காந்தி திடலில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் போலீசாருக்கு கைகளால் சைகை செய்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிகள் போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், மோகன்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

ரெயின்கோட்

பயிற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கீர்த்திவர்மன், கணேசன், கென்னடி உள்பட போலீசாரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா போலீசாரிடம் குறைகேட்டார்.

அப்போது போலீசார், மழைக்காலம் தொடங்க உள்ளதால் ரெயின்கோட் (மழை அங்கி), ஒளியை பிரதிபலிக்கும் உடைகள் போன்றவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவற்றை உடனே வழங்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா உறுதியளித்தார்.


Next Story